தேர்தல் கமிஷனின் சர்வதேச மாநாடு: டெல்லியில் இன்று தொடங்குகிறது

டெல்லியில் தேர்தல் கமிஷனின் சர்வதேச மாநாடு இன்று தொடங்குகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

தேர்தல் கமிஷன் கடந்த 2021-ம் ஆண்டு நடத்திய ஜனநாயகத்துக்கான உச்சி மாநாட்டை தொடர்ந்து ஆண்டுதோறும் சர்வதேச மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் 2-வது சர்வதேச மாநாடு டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. 'தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் தேர்தல் நேர்மை' என்ற தலைப்பில் நடைபெறும் இந்த 2 நாள் மாநாட்டை தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் தொடங்கி வைக்கிறார்.

இந்த மாநாட்டில் 17 நாடுகள் மற்றும் தேர்தல் அமைப்புகளை சேர்ந்த 43 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

இந்த தகவலை தேர்தல் கமிஷன் வெளியிட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com