அனில் அம்பானியின் ரூ. 3 ஆயிரத்து 34 கோடி சொத்துக்கள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி.
அனில் அம்பானியின் ரூ. 3 ஆயிரத்து 34 கோடி சொத்துக்கள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை
Published on

டெல்லி,

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி. இவரது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் மற்றும் அதன் கிளை நிறுவனங்கள் தனியார், அரசு வங்கிகளிடமிருந்தும், நிதி நிறுவனங்களிடமிருந்தும் கடன் வாங்கியுள்ளது. இந்த கடனை ரிலையன்ஸ் நிறுவனத்தின் பிற நிறுவனங்களுக்கு மடைமாற்றம் செய்ததாகவும், இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிவர்த்தனை, மோசடி நடைபெற்றுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதில் ரூ. 40 ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டவிரோத பண பரிவர்த்தை, பணமோசடி உள்ளிட்ட புகார்கள் தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் அனில் அம்பானியின் வீடு, அலுவலகங்கள் மற்றும் ரிலையன்ஸ் குழுமத்திற்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை, சிபிஐ சோதனை நடத்தியுள்ளது. மேலும், இந்த பணமோசடி புகார் தொடர்பாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும சொத்துக்கள் ரூ. 16 ஆயிரம் கோடி அளவுக்கு அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

இந்நிலையில், பணமோசடி வழக்கில் ரிலையன்ஸ் குழுமத்தின் மேலும் ரூ. 3 ஆயிரத்து 34 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை இன்று பறிமுதல் செய்துள்ளது. இதன் மூலம் 40 ஆயிரம் கோடி மோசடி வழக்கில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தின் ரூ. 19 ஆயிரத்து 344 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com