ராஜஸ்தானில் முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

பணமோசடி வழக்கில் இந்த சோதனை நடத்தப்படுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
Published on

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானின் பெஹ்ரோர் தொகுதி முன்னாள் சுயேச்சை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் பல்ஜீத் சிங். இவர் பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதாகக்கூறி எம்.எல்.ஏ. நிதியை முறைகேடு செய்தது தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை அவருக்கு சொந்தமான பல இடங்களில் சோதனை நடத்தி வருகிறது.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர், தவுசா மாவட்டங்களிலும், அரியானாவில் உள்ள ரேவாரி உள்பட மொத்தம் 9 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அமலாக்கத்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட நிதி பரிவர்த்தனைகள், சம்பந்தப்பட்ட நபர்கள் பற்றிய விரிவான தகவல்கள் எதையும் வெளியிடவில்லை. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த சோதனை நடத்தப்படுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com