பணமோசடி வழக்கு: சிவசேனா உத்தவ் அணி எம்.எல்.ஏ. வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு

சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே அணி எம்.எல்.ஏ. வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடைபெற்று வருகிறது.
பணமோசடி வழக்கு: சிவசேனா உத்தவ் அணி எம்.எல்.ஏ. வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு
Published on

மும்பை,

மராட்டிய மாநிலம் ஜோகேஷ்வரி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ரவீந்திர வைகர் (வயது 69). இவர் சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்தவர் ஆவார்.

இதனிடையே, ஜோகேஷ்வரி நகரில் ரவீந்திர வைகர் சட்டவிரோதமாக ஒப்புதல் பெற்று நட்சத்திர ஓட்டல்கள் கட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ரவீந்திர வைகர் மீது பணமோசடி வழக்குப்பதிவு செய்தனர்.

பணமோசடி வழக்கு என்பதால் ரவீந்திர வைகர் மீது அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தது.

இந்நிலையில், பணமோசடி வழக்கு தொடர்பாக எம்.எல்.ஏ. ரவீந்திர வைகர் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com