கல்வியில் சீர்திருத்தம் தேவை: ராகுல் காந்தி

கோரிக்கைகளை அரசு ஏற்ற நிலையில் மாணவர்களுக்கு ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி
Published on

புதுடெல்லி,

கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டன; போராட்டத்தில் ஈடுபடுவோர்

உடனடியாக போராட்டத்தை கைவிட்டு அமைதியாக வீடு திரும்புமாறு கேட்டுக்கொள்கிறோம்

எங்கள் எதிர்காலத் திட்டம் அல்லது பிற விஷயங்கள் குறித்து நாங்கள் உங்களுக்குத் தெரிவிப்போம் என கரப்பான் ஜனதா கட்சி செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டெல்லி ஜந்தர் மந்தரில் சுமார் 50 நாட்களாக நடைபெற்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நிறைவுக்கு வந்தது.

இந்தநிலையில், டெல்லியில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது;-

மாணவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. போராடிய மாணவர்களுக்கு வாழ்த்துகள். அனைத்து மாணவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு என் தரப்பிலிருந்து என்ன ஆதரவு தேவைப்பட்டாலும், எங்கிருந்து ஆதரவு தேவைப்பட்டாலும், நான் தயாராக இருக்கிறேன்.

கல்வியில் சீர்திருத்தம் தேவை

இந்தப் போராட்டத்திற்கு முழு மனதுடன் ஆதரவளிப்பதே காங்கிரஸ் கட்சியின் நோக்கமாக இருந்தது. நாங்கள் அதற்கு ஆதரவளித்தோம்.

இந்தியாவின் மாணவர்களைப் பாதுகாக்கவும், இந்தியாவின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் நாங்கள் இங்கு இருக்கிறோம். இது நரேந்திர மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆகிய கடந்த காலத்திற்கும், இந்தியாவின் எதிர்காலத்திற்கும் இடையிலான ஒரு போராட்டம். இந்தியாவின் எதிர்காலம் கடந்த காலத்தை வெல்லும் என்பதில் நாங்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளோம். கல்வியில் சீர்திருத்தம் தேவை என்பதே நாட்டு மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கை. இந்திய கல்வி முறையை கைப்பற்ற ஆர்.எஸ்.எஸ். முயற்சித்தது.

பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும்

நமது கல்வி முறைதான் சிறந்தது என உலக நாடுகள் அங்கீகரித்து வருகிறது. கல்வி முறையை சீரமைக்க நடவடிக்கைகள் தேவை.

நடந்த சம்பவம் மத்திய அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை. பெல்லட் குண்டுகளை பயன்படுத்த அமித்ஷா தான் அனுமதி அளித்தார். மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

அரசு என்பது தனிநபர்களுக்கானது அல்ல,மக்களுக்கானது. இளைஞர்களின் எதிர்கால விவகாரத்தில் பொறுப்புடன் செயல்பட வேண்டும். போராடிய மாணவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com