59 வயதில் மீண்டும் பள்ளிக்குத் திரும்பிய முதியவர்... 10-ம் வகுப்பு தேர்வுக்கு தயாராகிறார்

மேகாலயாவைச் சேர்ந்த சில்வெஸ்டர் ஷடாப் (59) என்ற முதியவர் தற்போது 10-ம் வகுப்பு தேர்வுக்கு தயாராகி வருகிறார்.
59 வயதில் மீண்டும் பள்ளிக்குத் திரும்பிய முதியவர்... 10-ம் வகுப்பு தேர்வுக்கு தயாராகிறார்
Published on: 

ஷில்லாங்,

மேகாலயாவைச் சேர்ந்த சில்வெஸ்டர் ஷடாப் (59), பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தி 37 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது மீண்டும் 10-ம் வகுப்பு தேர்வுக்கு தயாராகி வருகிறார்.

10-ம் வகுப்பு தேர்வு எழுதும் முதியவர்

மேகாலயாவின் ரிபோய் மாவட்டம் தத்ராங் உம்கெம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷடாப். குடும்பத்தின் பொருளாதார சூழல் காரணமாக 1989-ம் ஆண்டு பள்ளிப்படிப்பை நிறுத்தினார். குடும்பத்தை கவனிப்பதற்காக கல்வியை கைவிட்டாலும், படிப்பை முடிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்குள் தொடர்ந்து இருந்து வந்தது.

இந்நிலையில், பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்தியவர்களுக்கு மீண்டும் கல்வி கற்க வாய்ப்பு அளிக்கும் மேகாலயா அரசின் 'மீண்டும் கல்வி கற்கும் திட்டம்' ஷடாப்புக்கு புதிய வாய்ப்பை வழங்கியுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், வயது வரம்பின்றி 10-ம் வகுப்பு படிப்பை முடித்து தேர்வு எழுத முடியும். இதையடுத்து ஷடாப் தற்போது 10-ம் வகுப்பு தேர்வுக்கு தயாராகி வருகிறார்.

9,767 பேர் பதிவு

இந்த ஆண்டு இத்திட்டத்தின் கீழ் மேகாலயா முழுவதும் பள்ளி இடைநிற்றல் மாணவர்கள் 9,767 பேர் தனித்தேர்வர்களாக பதிவு செய்துள்ளனர். இவர்களில் அதிக வயதுடையவர் ஷடாப் ஆவார்.

மேகாலயா பள்ளிக்கல்வி வாரியம் மற்றும் 'எம்பவர்' அமைப்பு இணைந்து இந்த இரண்டாவது வாய்ப்பு கல்வித் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com