தேர்தல் ஆணையம் தனது பணியை செய்ய அனுமதிக்க வேண்டும்: எதிர்க்கட்சிகளுக்கு பாஜக கண்டனம்

ராகுல் காந்தி, இந்தியா கூட்டணி கட்சியினர் என எல்லோரும் சேர்ந்து டெல்லியில் உள்ள வீதிகளில் நாடகம் போட்டு ஊடகத்தின் கவனத்தை பெறுகின்றனர்.
தேர்தல் ஆணையம் தனது பணியை செய்ய அனுமதிக்க வேண்டும்: எதிர்க்கட்சிகளுக்கு பாஜக கண்டனம்
Published on: 

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி நாடு முழுவதும் இந்தியா கூட்டணி கட்சிகள் மற்றும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராடி வருகிறது. கடந்த சில நாட்களாக எதிர்க்கட்சிகளின் போராட்டத்தால் டெல்லி முடங்கியுள்ளது. இந்த நிலையில் பாஜக செய்தி தொடர்பாளர் என்.வி.சுபாஷ் எதிர்க்கட்சிகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: ராகுல் காந்தி, இந்தியா கூட்டணி கட்சியினர் என எல்லோரும் சேர்ந்து டெல்லியில் உள்ள வீதிகளில் நாடகம் போட்டு ஊடகத்தின் கவனத்தை பெறுகின்றனர். தேசத்தின் மக்களிடையே இது போன்ற கட்டுக்கதைகள் மற்றும் அமைதியின்மையை ஏற்படுத்தும் எதிர்க்கட்சிகளின் முயற்சியை பாஜக கண்டிக்கிறது. தேர்தல் ஆணையம் அதன் பணியை செய்ய அனுமதிக்க வேண்டும். மிக தெளிவான முறையில் எஸ்ஐஆர் நடவடிக்கை நிறுவப்பட்டது. நாடு முழுவதும் அந்த பணி நடைபெறுகிறது.

அடுத்த ஆண்டு உத்தர பிரதேசம், கோவா, உத்தராகண்ட், பஞ்சாப் மற்றும் மணிப்பூரில் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதில் எதிர்க்கட்சிகள் தோல்வி அடையும் என்பதை அவர்கள் அறிந்துள்ளனர். அதனால் தான் தேர்தல் ஆணையத்தின் மீதும், மோடி அரசு மீதும் பழி சுமத்துகிறார்கள். இதற்கு முன்பு குடியுரிமை திருத்தச் சட்டம் அமலானது. அப்போதும் இதையே தான் செய்தார்கள்.காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அவர்கள் தேசத்தின் வீதிகளில் இடையூறு ஏற்படுத்துகிறார்கள்”என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com