

இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் வாக்காளர் தீவிர திருத் தப்பணியில் தன்னிச்சையாக செயல்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் பதவி விலகவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.இந்தநிலையில் நேற்று உத்தவ் சிவசேனா கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே மற்றும் நவநிர்மாண் சேனா கட்சி சார்பில் தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிராக மும்பையில் பிரமாண்ட பேரணி நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த பேரணியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பாலாசாகேப் தோரட், விஜய் வடேடிவார் மற்றும் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி.) கட்சி சார்பில் ஜெயந்த் பாட்டீல், ஜிதேந்திர அவாத், அனில் தேஷ்முக் உள்பட ஒட்டுமொத்த எதிர்க்கட்சி தலைவர்களும் கைகோர்த்து பங்கேற்றனர்
அதன்படி தென்மும்பை மெட்ரோ சினிமா திரையரங்கு அருகில் இருந்து இந்த பிரமாண்ட பேரணி தொடங்கியது. இதற்கு 'விராட் கர்ஜனா மோர்ச்சா'(பிரமாண்ட கர்ஜனை பேரணி) என பெயரிடப்பட்டிருந்தது. தென்மும்பையில் உள்ள மும்பை மாநகராட்சி தலைமையகத்தை நோக்கி இந்தப்பேரணி நகர்ந்தது. இந்த பிரமாண்ட பேரணியில் ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர். போராட்டத்தில் எந்தவொரு அரசியல் கட்சியின் கொடிகளையும் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டது. பேரணியில் பங்கேற்ற தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் கைகளில் தேசியக்கொடியை மட்டுமே ஏந்தி சென்றனர்.வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்த தலைமை தேர்தல் கமிஷனர் உடனடியாக பதவி விலகவேண்டும் அல்லது அவரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பேரணியை தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உத்தவ் சிவசேனா கட் சித்தலைவர் உத்தவ் தாக்கரே பேசியதாவது:- தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பா.ஜனதாவின் ஒரு ஆயுதம் போல செயல்படுகிறார். மராட்டியத்தில் மட்டும் இந்த சிறப்பு திருத்தப்பணி நடவ டிக்கை மூலம் 2 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதேபோல தமிழ் நாட்டில் 70 லட்சம் வாக்காளர்களும், மேற்குவங்கத்தில் 30 லட்சம் வாக்காளர் களும் நீக்கப்பட்டுள்ளனர்.
பா.ஜனதா, மக்களின் வாக்குகளையும், மக்கள் பிரதி நிதிகளையும் திருடுவது மட்டுமின்றி, அயோத்தி ராமர் கோவில் நன்கொடையை யும் திருடிவிட்டது. 2-ம் உலகப்போருக்கு பிறகு நாஜிக்களுக்கு நடத்தப்பட்ட 'நியூரம்பெர்க் விசாரணை' போல, இந்த அதிகாரிகளுக்கும் பா.ஜனதாவினருக் கும் ஒருநாள் விசாரணை நடக்கும். மக்கள் கோபமடைந்தால் பா.ஜனதாவின் சிம்மாசனம் எரிந்து சாம்பலாகிவிடும். இவ்வாறு உத்தவ் தாக்கரே பேசினார்.