12 மாநிலங்களவை இடங்களுக்கு அக்.16-ம் தேதி தேர்தல்

உத்தர பிரதேசத்தில் 10 இடங்களுக்கும், உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரு இடத்திற்கும் தேர்தல் நடைபெறுகிறது.
அக்.16-ம் தேதி தேர்தல்
மாநிலங்களவை தேர்தல் அறிவிப்பு!
Published on

புதுடெல்லி,

உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள 12 மாநிலங்களவை இடங்களுக்கு அக்.16-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதில், உத்தரப் பிரதேசத்தில் 10 இடங்களுக்கும், உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரு இடத்திற்கும் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு பதவியில் உள்ள உறுப்பினர்களின் பதவிக்காலம் நவ. 25-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

மேலும், மேற்கு வங்காளத்தில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை இடத்துக்கான இடைத்தேர்தல் அக்.16-ம் தேதி நடைபெற உள்ளது.

அக்டோபர் 16 -ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com