சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஒவ்வொருவரும் பங்கெடுக்க வேண்டும் - எல்.முருகன்

அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் பங்கேற்றேன் என எல்.முருகன் தெரிவித்தார்.
மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் மத்திய இணை மந்திரி எல்.முருகன்
Published on

புதுச்சேரி,

2014-ஆம் ஆண்டு மே மாதம் 26-ஆம் தேதி முதன்முதலில் நாட்டின் பிரதமராக பதவியேற்ற மோடி, தற்போது தனது மூன்றாவது பதவிக்காலத்தை வெற்றிகரமாக தொடர்ந்து வருகிறார். கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா பல நல்ல மாற்றங்களை கண்டுள்ளது.

வளர்ந்த இந்தியா

மக்களுக்கு அரசின் அனைத்து உதவிகளும் நேரடியாக கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 'வளர்ந்த இந்தியா' என்ற இலக்கை நோக்கி மத்திய அரசு தொடர்ந்து முன்னேறும்.

மத்திய அரசின் இந்த 12 ஆண்டுகால வரலாற்று சாதனையை கொண்டாடும் வகையில், மத்திய இணை மந்திரி எல்.முருகன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

மரக்கன்று நடும் நிகழ்ச்சி

12 ஆண்டுகள் – நம்பிக்கை, வளர்ச்சி, மக்கள் நலன்" என்ற கருப்பொருளின் கீழ், பாரத பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 12 ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில், புதுச்சேரி முதலியார்பேட்டையில் அமைந்துள்ள அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.

பசுமை இந்தியா

பசுமை இந்தியா, வளர்ந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஒவ்வொருவரும் பங்கெடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com