முன்னாள் ஆந்திர மந்திரி ரோஜாவுக்கு சிக்கலா?

ஊழல் புகார் தொடர்பாக முன்னாள் மந்திரி ரோஜா உள்ளிட்ட 4 பேரை விசாரிக்க ஆந்திர சிஐடி போலீஸ் பரிந்துரைத்துள்ளனர்.
File image
File image
Published on

அமராவதி,

ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்காலத்தில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், கடைசி 2 ஆண்டுகள் சுற்றுசூழல் மற்றும் விளையாட்டு துறை மந்திரியாக இருந்தவர் நடிகை ரோஜா. அப்போது ரோஜா நடத்திய 'ஆடுதாம் ஆந்திரா' என்ற பெயரில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளை நடத்தினார்.

அந்த போட்டிகளை நடத்த அப்போது இருந்த ஜெகன் மோகன் அரசு 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. இந்நிலையில், போட்டிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு செய்ததாக பல தரப்பினர் ஆந்திர சிஐடி போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த ஊழல் புகார் தொடர்பாக முன்னாள் மந்திரி ரோஜா உள்ளிட்ட 4 பேரை விசாரிக்க ஆந்திர சிஐடி போலீஸ் விஜயவாடா போலீஸ் ஆணையருக்கு பரிந்துரைத்துள்ளது. இதனால், இந்த ஊழல் முறைகேடு குறித்து நடிகை ரோஜாவை எந்த நேரத்திலும் விஜயவாடா காவல் ஆணையர் அலுவலகம் விசாரணைக்கு அழைக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com