வங்காளதேச வன்முறைகள்.. உலக அரங்கில் மோடி பேசவேணடும்- ஜம்மு காஷ்மீர் முன்னாள் டி.ஜி.பி. வலியுறுத்தல்

வங்காளதேச அரசு சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி வலியுறுத்தவேண்டும்.
வங்காளதேச வன்முறைகள்.. உலக அரங்கில் மோடி பேசவேணடும்- ஜம்மு காஷ்மீர் முன்னாள் டி.ஜி.பி. வலியுறுத்தல்
Published on

ஜம்மு:

வங்காளதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவது தொடர்பாக ஜம்மு காஷ்மீரின் முன்னாள் டி.ஜி.பி. ஷேஷ் பால் வைத் கூறியதாவது:-

வங்காளதேச நிலவரம் தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதிகள், முன்னாள் ராணுவ வீரர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என 75 பேர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

வங்காளதேசத்தில் இந்துக்கள் கொடுமைகளை எதிர்கொள்கிறார்கள். இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இது வங்காளதேசத்தை மட்டுமின்றி சுற்றியுள்ள பிராந்திங்களையும் பாதிக்கும். இது முழு பிராந்தியத்திலும் குழப்பத்தை ஏற்படுத்தும்.

இந்த விவகாரம் ஒரு நாட்டின் உள்விவகாரம் அல்ல. ஐ.நா. சபையிலும் சர்வதேச அரங்குகளிலும் எழுப்பப்பட வேண்டிய விவகாரம்.

இந்திய பிரதமர் மோடி உலக அளவில் மதிக்கப்படும் தலைவர். அவர் சொல்வதை ஒவ்வொரு நாடும் உற்று கவனிக்கிறது. மக்களும் கேட்கிறார்கள். எனவே, இந்த விஷயத்தில் அவர் சொல்லவேண்டும். வங்காளதேச அரசு சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி வலியுறுத்தவேண்டும். தாக்குதல்களை தடுத்து நிறுத்த அழுத்தம் கொடுக்கவேண்டும். இந்த விவகாரம் குறித்து ஐ.நா. சபை போன்ற சர்வதேச அரங்குகளில் அவர் பேச வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com