பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி அதிரடியாக குறைப்பு

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி அதிரடியாக குறைப்பு
Published on

புதுடெல்லி,

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. லிட்டருக்கு ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், லிட்டருக்கு ரூ.13 ஆக இருந்த கலால் வரி ரூ.3 ஆக குறைக்கப்பட்டுள்ளது. டீசல் மீதான கலால் வரி பூஜ்ஜியமாக குறைந்துள்ளது. ஈரான் போரால் எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் கடுமையாக உயர்ந்துள்ளது.

எண்ணெய் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு கலால் வரியை குறைத்து உள்ளது. கலால் வரி குறைப்பு மூலம் பெட்ரோல், டீசல் விலை உயர்வது தவிர்க்கப்படும் என்றும் உற்பத்தி நிறுவனங்களுக்கு ஏற்படும் சுமையை குறைக்கும் வகையில் இந்த வரி குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com