முப்படை தலைமை தளபதியின் பதவிக்காலம் நீட்டிப்பு

முப்படை தலைமை தளபதியாக அனில் சவுகானின் செயல்பட்டு வருகிறார்.
புதுடில்லி
இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக செயல்பட்டு வரும் அனில் சவுகானின் பதவிக்காலத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இது தொடர்பாக மத்திய பாதுகாப்புததுறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது;
“முப்படை தலைமை தளபதி மற்றும் ராணுவ விவகாரங்கள் துறை செயலாளராக இருக்கும் அனில் சவுகானின் பதவிக்காலம் வரும் 2026 மே 30 அல்லது மறு உத்தரவு வரும் வரை நீட்டிக்கப்படுகிறது. ராணுவத்தில் 1981ம் ஆண்டு சேர்ந்த அவர், சிறப்பான பணியாற்றியதுடன், பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். பல பதக்கங்களை பெற்றுள்ளார். 2022 செப்.,30 முதல் முப்படை தலைமை தளபதியாக பணியாற்றி வருகிறார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது
Related Tags :
Next Story






