

ராஞ்சி,
ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில் ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட முதல்-மந்திரி ரகுபர் தாஸ் தோல்வி அடைந்தார். முதலில் அவர் முன்னிலையில் இருந்தபோதிலும், இறுதியில் தோற்று விட்டார்.
அவரை தோற்கடித்தவர், சுயேச்சை வேட்பாளர் சரயு ராய். இவர், தேர்தலுக்கு முன்புவரை ரகுபர் தாஸ் மந்திரிசபையில் கேபினட் மந்திரியாக இருந்தவர். தேர்தலில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படாததால், மந்திரிசபையில் இருந்தும், பா.ஜனதாவில் இருந்தும் விலகி, ரகுபர் தாசை எதிர்த்து சுயேச்சையாக களம் இறங்கினார். இப்போது, வெற்றி பெற்று விட்டார்.