தகாத உறவால் சிதைந்த குடும்பம்... பிள்ளைகளைத் தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் தற்கொலை செய்த தாய்

கள்ளத் தொடர்பால் குடும்பம் சீரழிந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
தகாத உறவால் சிதைந்த குடும்பம்...  பிள்ளைகளைத் தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் தற்கொலை செய்த தாய்
Published on

திருப்பதி,

ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டம், உருக்குண்டாவை சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி பிரமிளா (வயது32). இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு பிரமிளா அவரது உறவினர் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்றார்.

அலகு தின்னேவை சேர்ந்தவர் ரங்கசாமி (21). இவர் புரோட்டோத்தூரில் உள்ள தனியார் பல்பொருள் அங்காடியில் வேலை செய்து

வந்தார். இந்த நிலையில் பிரமிளாவுக்கும், ரங்கசாமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளகாதலாக மாறியது. இருவரும் குழந்தைகளுடன் புரோட்டோத்தூரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். ஒரு மாதத்தில் ரங்கசாமிக்கும் பிரமிளாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் வீட்டில் உள்ள மின்விசிறியில் ஒரே புடவையில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

Also Read
புதுப்பெண் மீது ஆசிட் வீச்சு: முன்னாள் காதலனை திருமணம் செய்ய இருந்ததால் இளம்பெண் ஆத்திரம்
தகாத உறவால் சிதைந்த குடும்பம்...  பிள்ளைகளைத் தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் தற்கொலை செய்த தாய்

வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் வீட்டிற்கு உள்ளே வந்து பார்த்தபோது இருவரும் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ரங்கசாமியின் பெற்றோருக்கு போலீசார் தகவல் அளித்தனர். அவர்கள் உடலை வாங்கிச் சென்றனர். இதேபோல் பிரமிளாவின் கணவருக்கும் அவரது உறவினருக்கும் தகவல் தெரிவித்தனர். பிரமிளாவின் குடும்பத்தினர் உடலை வாங்க மறுத்து விட்டனர். உடலை வாங்க யாரும் வராததால் போலீசார், நகராட்சி ஊழியர்களுடன் சேர்ந்து அடக்கம் செய்தனர்.

பிரமிளாவின் 2 குழந்தைகளும் ஆதரவின்றி யாரும் இல்லாமல் நின்றனர். இதனை கண்ட போலீசார் குழந்தைகளுக்கு புத்தாடைகள் மற்றும் சிறிது பணத்தை கொடுத்து கடபபாவில் உள்ள ஆசிரமத்தில் சேர்த்தனர். கள்ளத் தொடர்பால் குடும்பம் சீரழிந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

கவனத்திற்கு: தற்கொலை என்பது எதற்கும் தீர்வாகாது. மன அழுத்தம் அல்லது இது போன்ற சிக்கல்கள் இருந்தால் தகுந்த ஆலோசகர்களையோ அல்லது அரசு உதவி எண்களையோ தொடர்பு கொள்ளவும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com