பணம் குவிய வேண்டும் என்றால்...சாமியார் பேச்சை கேட்டு கண்பார்வையற்ற தாயை நரபலி கொடுக்க முயன்ற விவசாயி

சித்ரா பவுர்ணமியான நேற்று பெற்ற தாய் என்றும் கூட பாராமல் ஷெட்டியை நரபலி கொடுக்க மடாஷெட்டி முடிவு செய்தார்.
பணம் குவிய வேண்டும் என்றால்...சாமியார் பேச்சை கேட்டு கண்பார்வையற்ற தாயை நரபலி கொடுக்க முயன்ற விவசாயி
Published on

பெங்களூரு,

சாம்ராஜ்நகர் அருகே செல்வம் பெருகும் என சாமியார் கூறியதால் 80 வயது கண் பார்வை யற்ற தாயை நரபலி கொடுக்க முயன்ற விவசாயியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் சாகடே கிராமத்தை சேர்ந்தவர் ஷெட்டி (வயது 80). கண்பார்வையற்ற, காது கேளாத இந்த மூதாட்டிக்கு மடாஷெட்டி (55) என்ற மகன் உள் ளார். இவர் விவசாயி ஆவார். இந்த நிலையில் மடாஷெட்டி ஒரு சாமியாரை சந்தித்ததாக தெரிகிறது. அவரிடம் தனக்கு செல்வம் கொழிக்க வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது.

அப்போது பணம் பெருக கண்பார்வையற்ற தாயை நரபலி கொடுக்க சாமியார் கூறியதாக சந்தேகிக்கப்படுகிறது. அதுவும் சித்ரா பவுர்ணமியான நேற்று பெற்ற தாய் என்றும் கூட பாரா மல் ஷெட்டியை நரபலி கொடுக்க மடாஷெட்டி முடிவு செய்தார்.

அதன்படி தனது தாயின் வீட்டுக்கு வந்த ஷெட்டி வீட்டில் 4 அடி நீளத்திற்கு குழி தோண்டி யுள்ளார். அவருடன் சாமியார் ஒருவரும் இருந்ததாக தெரிகிறது. பின்னர் பானை, குங்குமம். மஞ்சள், எலுமிச்சை பழம் வைத்து மாந்திரீக பூஜை செய்துள்ளனர். மேலும் ஷெட்டியை நர பலி கொடுக்க ஏற்பாடுகளை அவர்கள் செய்து வந்தனர்.

இதுபற்றி அப்பகுதி மக்களுக்கு தெரியவந்தது. உடனே அவர்கள் சாம்ராஜ்நகர் புறநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதை அறிந்த சாமியார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து மடாஷெட் டியை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில், பணம் பெருக தாயை சித்ரா பவுர்ணமி நாளில் நரபலி கொடுக்க மடாஷெட்டி முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் சம்பவம் பற்றி போலீசார் வழக்குப் பதிவு செய்து கைதான மடாஷெட்டியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பணம் குவிய வேண்டும் என்றால் பெற்ற தாயை விவசாயி நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச் சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com