மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் 200 இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெறும்; ஜே.பி.நட்டா நம்பிக்கை

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் 200 இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெறும் என்று பாஜக நம்பிக்கை தெரிவித்துள்ள்ளது.
மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் 200 இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெறும்; ஜே.பி.நட்டா நம்பிக்கை
Published on

கொல்கத்தா,

மேற்குவங்காள சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அங்கு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அங்குள்ள பர்த்வான் என்ற இடத்தில் நடந்த பேரணியில் பங்கேற்ற ஜே.பி.நட்டா பேசுகையில்,

மேற்குவங்காள சட்டசபை தேர்தலில் 200 இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெறும். மம்தாபானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசை வீட்டுக்கு அனுப்பிவிட்டு பா.ஜ.க.வை அரியணையில் அமர வைக்க மக்கள் தயாராகி விட்டார்கள் என்று தெரிவித்தார்.

மத்திய அரசின் திட்டங்களை பெயரை மாற்றி மம்தா அரசு செயல்படுத்தி வருவதாக குற்றம்சாட்டிய ஜே.பி.நட்டா, 29 மாநிலங்களில் வேளாண் வளர்ச்சியில் பின்தங்கி மேற்குவங்காளம் 24-வது இடத்தில் உள்ளது. மத்திய அரசின் நலத்திட்டங்கள் முழுமையாக கிடைக்க பா.ஜ.க.வை ஆதரியுங்கள் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com