கடந்த மூன்றாண்டுகளில் அந்நிய முதலீடு அதிகரித்துள்ளது - பிரதமர்

கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இந்தியாவிற்கு வரும் நேரடி அந்நிய முதலீடு அதிகரித்துள்ளது என்றுள்ளார் பிரதமர் மோடி.
கடந்த மூன்றாண்டுகளில் அந்நிய முதலீடு அதிகரித்துள்ளது - பிரதமர்
Published on

புதுடெல்லி

தனது அரசின் மூன்றாண்டு ஆட்சி மீது கண்ணோட்டம் ஒன்றை வெளியிட்ட அவர் உலக பொருளாதாரத்தில் இந்தியாவிற்கு பிரகாசமான இடமுண்டு என்றும், இங்கு வர்த்தகம் செய்வது எளிதானது, வரிக் கொள்கை கணிக்கக்கூடியதாகவும், நிலைத்துமுள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த மூன்றாண்டுகளில் 34,487 அமெரிக்க டாலர்களிலிருந்து 61,724 அமெரிக்க டாலர்களாக இந்திய நேரடி அந்நிய முதலீடு அதிகரித்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

லின்க்ட்.இன் எனும் சமூக வலைத்தளதில் குறிப்பிடும்போது ஜிஎஸ்டி நாட்டிற்கு நீண்ட காலப் பலன்களை அளிக்கும் என்றார்,

பாஜக அரசு பதவியேற்கும் போது இருந்த சூழ்நிலை, இன்று மிகவும் மேம்பட்டுள்ளது என்றார் மோடி.

இன்று இந்தியாவிற்குள் சாதனை அளவாக அந்நிய முதலீடுகள் குவிந்துள்ளன என்பதை பெருமையும் பகிர்ந்து கொள்கிறேன் என்றார் பிரதமர். தனது அரசின் வழிகாட்டுக் கொள்கை மாற்றத்தினை நோக்கிய சீர்திருத்தம் என்பதேயாகும் என்றார் மோடி. மாநிலங்களுக்குள் ஆரோக்கியமான சீர்திருத்தப் போட்டி நிலவுவதாக மோடி தெரிவித்தார். தனது அரசு அடிப்படை உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தும், அவற்றை குறிப்பிட்டக் காலத்தில் நிறைவேற்றவும் முன்னுரிமை கொடுத்து வருகிறது என்றார் பிரதமர். எங்களது இலக்கு திறமையாலும், தொழில்நுட்பத் திறனாலும் இயக்கும் இந்தியாவாகும். கடந்த மூன்றாண்டுகளில் கணிசமான பாதையைக் கடந்துள்ளோம்; புதிய உயரங்களை தொட்டு முன்னேற்றத்தை அடைய உள்ளோம் என்றார் பிரதமர் மோடி.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com