பாஸ்போர்ட் முதல் ஆதார் வரை கட்டணம் மாறுது..நாளை முதல் வரும் மாற்றங்கள் என்னென்ன?

ஜூலை 1 ஆம் தேதி முதல் புதிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன.
Image credits: AI
Image credits: AI
Published on

ஜூலை 1 ஆம் தேதியான நாளை முதல் ஆதார், பாஸ்போர்ட், வாகனங்களின் விலை மற்றும் கிரெடிட் கார்டு விதிகளில் மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. இந்திய தனித்துவ அடையாள ஆணைய (யூ.ஐ.டி.ஏ.ஐ.) தளத் தில் ஆதார் எண்ணுடன் 'இ-மெயில்' முகவரியை இணைக்க கட்டணமாக ரூ.75 வசூலிக்கப்பட்டு வந்தது. நாளை முதல் டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரை 'இ-மெயில்' முகவரியை கட்டணம் இன்றி இணைத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பாஸ்போர்ட்

வெளிநாடுகளுக்கு செல்ல பயன்படுத்தப்படும் பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணம் நாளை முதல் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணம் ரூ.1,500-ல் இருந்து ரூ.2 ஆயிரத்து 500 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதேபோல பாஸ்போர்ட்டுக்கான தட்கல் விண்ணப்ப கட்டணம் ரூ.3,500-ல் இருந்து ரூ.5 ஆயிரமாக கூடியுள்ளது.

வாகனங்களை உற்பத்தி செய்யும் சில நிறுவனங்கள் தனிநபர் பயன்பாட்டுக்கான கார்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான வாகனங்களின் விலையை 1.5 சதவீதம் முதல் வெவ்வேறு பிரிவுகளில் 3 சதவீதம் வரை உயர்த்துவதாக தெரிவித்துள்ளன. கிரெடிட் கார்டு விதிமுறைகளிலும் மாற்றங்கள் வரப்போகிறது. பல புதிய வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளன. சில பரிவர்த்தனைகள் வெகுமதி புள்ளிகளின் (ரிவார்ட்) வகையில் இருந்து அகற்றப்பட்டுள்ளன.

கிரெடிட் கார்டு

சில கிரெடிட் கார்டுதாரர்கள் 3 மாதத்துக்கு மூன்று முறை உள்நாட்டு விமான நிலைய ‘லவுஞ்ச்'களை இலவசமாக பயன்படுத்த வழிவகை வழங்கியுள்ளது. இருப்பினும், இதற்காக அவர்கள் ஒவ்வொரு காலாண்டிலும் குறைந்தபட்சம் ரூ.60 ஆயிரம் செலவிடவேண்டும் என்று கடிவாளம் போட்டுள்ளது. இதுபோல அறிவிக்கப்படாத பல மாற்றங்களும் நிகழ வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com