வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து ரூ.4.58 கோடியை சுருட்டிய வங்கி பெண் அதிகாரி

வாடிக்கையாளர்களின் நிதியை பயன்படுத்தி பங்கு சந்தையில் அவர் முதலீடு செய்து உள்ளார்.
வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து ரூ.4.58 கோடியை சுருட்டிய வங்கி பெண் அதிகாரி
Published on

கோட்டா,

ராஜஸ்தானின் கோட்டா நகரில் பிரபல தனியார் வங்கியின் பெண் அதிகாரி ஒருவர் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் இருந்து பெரும் தொகையை எடுத்து தன்னுடைய சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தி கொண்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி உத்யோக் நகர் காவல் நிலையத்தின் துணை ஆய்வாளர் முகமது இப்ராகிம் செய்தியாளர்களிடம் கூறும்போது, வங்கி அதிகாரி சாக்சி குப்தா 43 வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.4.58 கோடி நிதியை எடுத்து உள்ளார். இந்த மோசடி பற்றி தெரிய வந்ததும் புகார் அளிக்கப்பட்டது.

இதுபற்றி வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது. சாக்சி கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த நிதியை பயன்படுத்தி பங்கு சந்தையில் அவர் முதலீடு செய்து உள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த விவகாரம் பற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com