டெல்லி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து


டெல்லி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
x
தினத்தந்தி 3 Feb 2025 1:14 PM IST (Updated: 3 Feb 2025 4:55 PM IST)
t-max-icont-min-icon

தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுடெல்லி,

டெல்லியின் பவானா தொழில்துறை பகுதியில் பிளாஸ்டிக் கோப்பு உற்பத்தி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று காலை 7.51 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் பற்றி போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ அருகிலுள்ள பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கும் வகையில் அங்கு 16 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த தீ விபத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story