டெல்லி: அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்து - மீட்பு பணிகள் தீவிரம்

4 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
 டெல்லி: அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்து - மீட்பு பணிகள் தீவிரம்
Published on

டெல்லி,

தலைநகர் டெல்லியின் மெஹ்ருலி நகரில் சதுலாஜப் பகுதியில் 5 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் ஏராளமானோர் வசித்து வந்தனர்.

இந்நிலையில், அந்த அடுக்குமாடி குடியிருப்பு இன்று இரவு 8 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

மீட்பு பணிகள்

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், மீட்புக்குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. தற்போதுவரை 4 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதால் அவர்களையும் மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com