

புதுடெல்லி,
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்களும், ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.க்களும் பாராளுமன்றத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் கள்.
ஏற்கனவே இந்த கோரிக்கைக்காக பாராளுமன்றத்தில் இரு கட்சிகளும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் கொடுத்துள்ளன.
ஆனால் பல்வேறு கோரிக்கைகளுக்காக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால் இந்த கூட்டத் தொடர் முழுவதும் பாதிக்கப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது. இன்று பாராளுமன்ற கூட்டத்தின் கடைசி நாள் ஆகும். இன்றும் அமளி நீடித்து சபை ஒத்தி வைக்கப்படும் நிலை உள் ளது.
இதற்கிடையே தங்கள் கோரிக்கை ஏற்கப்படாததால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.க்கள் 5 பேரும் கடைசி நாளான இன்று ராஜினாமா செய்யப்போவதாக அறிவித் துள்ளனர்.
முதல் கட்டமாக மிதுன் ரெட்டி எம்.பி. ராஜினாமா செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் நேரில் சந்தித்து கடிதம் கொடுத்தார்.