இமாச்சலபிரதேசத்தில் வெள்ளம்: பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு


இமாச்சலபிரதேசத்தில் வெள்ளம்: பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
x
தினத்தந்தி 27 Jun 2025 9:53 AM IST (Updated: 27 Jun 2025 11:09 AM IST)
t-max-icont-min-icon

கனமழையால் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

டேராடூன்,

இமாச்சலபிரதேசத்தின் கங்ரா மற்றும் குல்லு மாவட்டங்களில் நேற்று முன் தினம் கனமழை பெய்தது. மேகவெடிப்பு காரணமாக கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த கனமழையால் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த வெள்ளத்தில் சிக்கி ஏற்கனவே 2 பேர் உயிரிழந்த நிலையில், 5 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களில் 2 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் கனமழை, வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட எஞ்சிய 3 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

1 More update

Next Story