‘யாஸ்’ புயல் காரணமாக மும்பையில் இருந்து புவனேஷ்வர், கொல்கத்தா இடையே விமான சேவை ரத்து

மும்பையில் இருந்து புவனேஷ்வர், கொல்கத்தா இடையே இயக்கப்படும் 6 விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘யாஸ்’ புயல் காரணமாக மும்பையில் இருந்து புவனேஷ்வர், கொல்கத்தா இடையே விமான சேவை ரத்து
Published on

மும்பை,

வங்களா விரிகுடா கடலில் உருவான யாஸ் புயல் ஒடிசா மற்றும் மேற்கு வங்காள மாநிலத்தின் இடையே நேற்று கரையை கடந்தது. இதன் காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் 10-க்கும் மேற்பட்ட கடலோர மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளன. மேலும் 3 லட்சம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன.

இந்த நிலையில் சிவில் விமான இயக்குனரகம் விடுத்துள்ள அறிக்கையில், யாஸ் புயல் காரணமாக மும்பையில் இருந்து ஒடிசா மாநில தலைநகரான புவனேஸ்வர் மற்றும் மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தா ஆகிய 2 நகரங்கள் இடையே இயக்கப்படும் 6 விமான சேவைகள் புறப்பாடு மற்றும் வருகை ஆகியவை ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும், மற்ற பகுதிகளுக்கு விமானங்கள் கால அட்டவணைபடி தொடர்ந்து இயக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com