கர்நாடகா முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகன் காருக்குள் எரித்து கொலை..? போலீசார் விசாரணை

அடர்ந்த வனத்தில், ஆளில்லாத பகுதியில் கார் ஒன்று இன்று பிற்பகல் 2.30 மணியளவில் எரிந்து கொண்டிருந்தது.
கர்நாடகா முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகன் காருக்குள் எரித்து கொலை..? போலீசார் விசாரணை
Published on

பெலகாவி

கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் பெயில்ஹொங்கால் பகுதியை சேர்ந்தவர் பாபுராவ் போல்ஷெட்டி. முன்னாள் எம்.எல்.ஏ.வான இவருடைய மகன் ராஜு போல்ஷெட்டி (வயது 53). இந்நிலையில், தார்வாத் நகரில் ரமாப்பூர் கிராமத்தில் ரெயில்வே தண்டவாளம் அருகே அடர்ந்த வனத்தில், ஆளில்லாத பகுதியில் கார் ஒன்று இன்று பிற்பகல் 2.30 மணியளவில் எரிந்து கொண்டிருந்தது.

உடனடியாக இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து சோதனை செய்தபோது, காருக்குள் எரிந்து கிடந்த உடல் ஒன்றை கண்டறிந்தனர். இதன்பின்னரே, அவர் முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகன் ராஜு போல்ஷெட்டி என தெரிய வந்தது. அவருடைய காருக்குள் அவர் எரிந்த நிலையில் கிடந்துள்ளார்.

அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல் எரிந்து போயுள்ளது. சம்பவம் பற்றி போலீசார் கூறும்போது, அவரை யாரேனும் கடத்தி, படுகொலை செய்து அடர்ந்த வனத்தில் கொண்டு வந்து, உடலை காருக்குள் வைத்து, காரோடு சேர்த்து தீ வைத்து, எரித்து விட்டு தப்பி சென்றிருக்க கூடும் என சந்தேகம் தெரிவித்து உள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தடய அறிவியல் குழுவும், மோப்ப நாய் குழுவினரும் சம்பவ பகுதிக்கு சென்றுள்ளனர். இதுபற்றி வழக்கு பதிவு செய்து, தார்வாத் கிராமப்புற போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Also Read
ஈரானின் புதிய பாதுகாப்பு தலைவராக முகமது பக்கீர் அறிவிப்பு
கர்நாடகா முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகன் காருக்குள் எரித்து கொலை..? போலீசார் விசாரணை

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com