கேரள முன்னாள் மந்திரி குருவிலா உடல்நல குறைவால் காலமானார்

2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை கொத்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார்.
கேரள முன்னாள் மந்திரி குருவிலா உடல்நல குறைவால் காலமானார்
Published on

கொச்சி

கேரள முன்னாள் மந்திரி மற்றும் கேரள காங்கிரசின் (ஜோசப்) துணை தலைவரான டி.யு. குருவிலா வயது முதிர்வு மற்றும் உடல்நல குறைவால் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 89.

முன்னாள் முதல்-மந்திரி வி.எஸ். அச்சுதானந்தன் தலைமையிலான அரசில் பொதுப்பணி துறை மந்திரியாக பதவி வகித்த குருவிலா, 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை கொத்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார்.

அவருடைய மறைவுக்கு முதல்-மந்திரி வி.டி. சதீசன், முன்னாள் முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com