

புதுடெல்லி,
அசோக் விஹார் பகுதியில் மூன்று மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்து நேரிட்டதில் ஒரு பெண்ணும், 4 சிறுவர்களும் உயிரிழ்ந்து உள்ளனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 பேர் காயம் அடைந்துள்ளனர், காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது, போலீஸ் மற்றும் தீயணைப்பு படை மீட்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கிடையே இரண்டு தேசிய பேரிடர் மீட்பு குழுவும் மீட்பு பணியில் இணைக்கப்பட்டுள்ளது. கட்டிடம் 20 வருடங்கள் பழமையானது என்றும், அதனுடைய கட்டமைப்பு வலிமையற்று காணப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.