போலீஸ் கான்ஸ்டபிள், மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வில் ஆள்மாறாட்டம்; 4 பேர் கைது

போலீஸ் கான்ஸ்டபிள் மற்றும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
போலீஸ் கான்ஸ்டபிள், மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வில் ஆள்மாறாட்டம்; 4 பேர் கைது
Published on

ஜெய்பூர்,

ராஜஸ்தானில் போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வு கடந்த 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடந்தது. இதேபோன்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று நடந்தது.

இந்த நிலையில், இந்த தேர்வுகளில் ஆள்மாறாட்ட செயலில் சிலர் ஈடுபடுகின்றனர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து தேர்வு முடிந்து புதுடெல்லி செல்வதற்காக பேருந்துக்கு காத்திருந்த 4 குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்கள் பீகாரை சேர்ந்த பிரமோத் குமார், வினய் குமார் மற்றும் அவ்னீஷ் குமார் என்றும் மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த சேத்ரம் மீனா என்றும் தெரிய வந்துள்ளது.

அவர்களிடம் இருந்து அதிக அளவில் தேர்வுக்கான நுழைவு அட்டைகள், புகைப்படங்கள், ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் புகைப்பட அடையாள அட்டைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதனை தொடர்ந்து குற்றவாளிகளுக்கு எதிராக வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டு உள்ளது. தேர்வில் ஆள்மாறாட்ட செயல்களில் ஈடுபடும் கும்பலின் தலைவனை கைது செய்வதற்கு போலீசார் குழு ஒன்று சென்றுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com