புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பிரெஞ்சு மொழி நீக்கம்

பிரெஞ்சு பயின்று வரும் மாணவர்கள் நிலை என்னவாகும் என கல்வியாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பிரெஞ்சு மொழி நீக்கம்
Published on

புதுச்சேரி,

புதுச்சேரியில் 2026-27 கல்வியாண்டில் இருந்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பிரெஞ்சு மொழி நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய மொழிக் கொள்கை ஒரு வெளிநாட்டு மொழியை மட்டுமே அனுமதிப்பதால் இம்மொழி நீக்கப்பட்டுள்ளது.

2-ம் மொழியாக பிரெஞ்சை தேர்வு செய்த மாணவர்கள் ஏற்கனவே பயின்ற மொழிக்கே மீண்டும் மாறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பிரெஞ்சு பயின்று வரும் மாணவர்கள் நிலை என்னவாகும் என கல்வியாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com