அடிக்கடி சண்டை: தூங்கிய கணவனை வீட்டுக்குள் பூட்டி தீ வைத்து தப்பிய மூதாட்டி; கொலை வழக்கு பதிவு

கணவரை இதற்கு முன்பும் கூட கொலை செய்ய சுமித்ரா முயன்றிருக்கிறார் என போலீசார் தெரிவித்தனர்.

அடிக்கடி சண்டை:  தூங்கிய கணவனை வீட்டுக்குள் பூட்டி தீ வைத்து தப்பிய மூதாட்டி; கொலை வழக்கு பதிவு
Published on

லக்னோ

உத்தர பிரதேசத்தின் மகராஜ்கஞ்ச் மாவட்டத்தில் பஸ்பார் கிராமத்தில் வசித்து வந்தவர் ராம்பத் (வயது 65). இவருடைய மனைவி சுமித்ரா (வயது 60). கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது.

இதனால் ஆத்திரத்தில் இருந்த சுமித்ரா, கணவர் வீட்டுக்குள் தூங்கி கொண்டிருந்தபோது, அவரை உள்ளே வைத்து பூட்டி, வீட்டுக்கு வெளியே இருந்து தீ வைத்து விட்டு தப்பி விட்டார். இதில், தீ வீடு முழுவதும் பரவியது.

Also Read
சென்னை ராஜாஜி நகரில் ரூ.11.88 கோடி செலவில் மூத்த குடிமக்கள் உறைவிடம்; முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

அடிக்கடி சண்டை:  தூங்கிய கணவனை வீட்டுக்குள் பூட்டி தீ வைத்து தப்பிய மூதாட்டி; கொலை வழக்கு பதிவு

இந்த சம்பவத்தில் ராம்பத் உடல் கருகி பலியாகி விட்டார். இந்த தகவல் அறிந்து போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கு முன்பும் கூட, கணவரை கொலை செய்ய சுமித்ரா முயன்றிருக்கிறார் என போலீசார் தெரிவித்தனர். இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. சுமித்ராவை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com