

பால்கர்,
மகனை கொன்று விடுவதாக மிரட்டி நண்பரின் மனைவியை கூட்டு பலாத்காரம் செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மராட்டிய மாநிலம் மும்பை அருகே உள்ள பால்கர் மாவட்டம் விரார் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் 4 வயது மகனுடன் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு கணவரின் நண்பர்களான சூரஜ் யாதவ் மற்றும் விஷால் ஆகியோர் அடிக்கடி வந்து சந்தித்து சென்றனர். அப்போது வீட்டில் இருந்த நண்பரின் மனைவியை கண்டு 2 பேரும் சபலம் அடைந்தனர்.
இதையடுத்து கடந்த 8-ந்தேதி நண்பர் வேலை விஷயமாக வெளியே சென்றிருந்தார். வீட்டில் நண்பரின் மனைவி 4 வயது மகனுடன் தனியாக இருந்தார். அப்போது கணவரின் நண்பர்களான 2 பேரும் வீட்டிற்குள் புகுந்தனர். நண்பரின் மனைவியை 2 பேரும் சேர்ந்து வலுக்கட்டாயமாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தனர். இதனை அப்பெண் தடுத்தபோது மகனை கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இதன்பின் னர் 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். பாதிக்கப்பட்ட பெண் நடந்த சம்பவத்தை கணவரி டம் தெரிவித்து விரார் போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கணவரின் 2 நண்பர்களையும் கைது செய்தனர். இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.