மும்பையில் மாலில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி மயங்கி விழுந்து உயிரிழப்பு

மும்பை மாலில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் மாலில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி மயங்கி விழுந்து உயிரிழப்பு
Published on

மும்பை,

காட்கோபரின் புறநகர் பகுதியில் உள்ள ஷாப்பிங் மாலின் குழந்தைகள் மண்டலத்தில் (Kids Zone) இன்று மதியம் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பந்த் நகர் காவல் நிலைய அதிகாரி கூறுகையில், சிறுமி தனது குடும்ப உறுப்பினர்களுடன் நீல்யோக் மாலுக்கு வந்துள்ளார். அங்கு சிறுமி, மற்ற குழந்தைகளுடன் மாலில் உள்ள குழந்தைகள் மண்டலத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.

இதையடுத்து சிறுமியின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மால் ஊழியர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிறுமியை கொண்டு சென்றனர், அங்கு சிறுமி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். சிறுமியின் மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று அவர் கூறினார்.

மேலும், முதல் கட்ட தகவலின் அடிப்படையில், போலீசார் விபத்து இறப்பு அறிக்கையை (Accidental Death Report) பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com