பஸ்சில் பயணம் செய்த பெண்ணிடம் தங்க சங்கிலி திருட்டு

கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சியை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
அமராவதி,
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிரீஷா. இவர், தனது சொந்த கிராமத்துக்குச் செல்வதற்காக பலமநேரில் இருந்து சவுடேப்பள்ளிக்கு பஸ்சில் ஏறினார். அப்போது அதே பஸ்சில் பயணம் செய்த மற்றொரு பெண் ஒருவர், தன்னிடம் இருந்த பணம் காணாமல் போய்விட்டதாகக் கூறி ஓடும் பஸ்சில் இருந்து கீழே இறங்கி விட்டார்.
இதையடுத்து சிரீஷா தனது பையில் வைத்திருந்த 12 கிராம் எடையிலான தங்கச் சங்கிலியைப் பார்த்தபோது, அது காணாமல் போய் இருந்தது. தனது தங்கச் சங்கிலியைக் காணவில்லை, எனக் கூறி சிரீஷா கூச்சலிட்டார். இதுகுறித்து சவுடேப்பள்ளி போலீசில் சிரீஷா புகார் செய்தார்.
இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பஸ் சென்ற பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story






