பெங்களூரு ரூ.3¼ கோடி கடத்தல் தங்கம் சிக்கியது

பெங்களூரு 2-வது முனையத்தின் தொடக்க நாளில் ரூ.3¼ கோடி கடத்தல் தங்கம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு ரூ.3¼ கோடி கடத்தல் தங்கம் சிக்கியது
Published on

பெங்களூரு:

பெங்களூரு புறநகர் தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையம் வழியாக தங்கம், போதைப்பொருட்கள் கடத்தல் அவ்வப்போது நடந்து வருகிறது. கடந்த 12-ந் தேதி கெம்பேகவுடா விமான நிலையத்தின் 2-வது முனையத்தில் விமான போக்குவரத்து தொடங்கப்பட்டது. அன்றைய தினம் துபாயில் இருந்து வந்த விமானத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தப்பட்டது தெரிந்துள்ளது.

அதாவது துபாயில் இருந்து வந்த விமான பயணிகளை அதிகாரிகள் வழக்கம்போல் சோதனை செய்தனர். அப்போது அதில் பயணிகள் 3 பேரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை பிடித்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவர்களது ஆடைகளுக்குள் பற்பசை வடிவில் தங்கம் இருந்தது தெரிந்தது.

இதையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.3 கோடி மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து தங்கம் கடத்தியதாக 3 பெண்களை அதிகாரிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதில் ஒருவர் சென்னையை சேர்ந்தவர் என்பது தெரிந்தது. பெங்களூரு விமான நிலையத்தின் 2-வது முனையத்தின் தொடக்க நாளில் ரூ.3 கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com