விமான நிலையத்தில் சாக்லேட் பாக்கெட்டில் மறைத்து கடத்திய தங்கம் பறிமுதல்: 2 பேர் மீது வழக்கு

ஒரு பயணியிடமிருந்து 200 கிராம் மற்றும் மற்றொருவரிடமிருந்து 196 கிராம் என மொத்தம் 396 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
விமான நிலையத்தில் சாக்லேட் பாக்கெட்டில் மறைத்து கடத்திய தங்கம் பறிமுதல்: 2 பேர் மீது வழக்கு
Published on

புதுடெல்லி,

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சாக்லேட் பாக்கெட்டுகளுக்குள் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட 396 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ரியாத்திலிருந்து டெல்லி வந்த இரண்டு பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் கிரீன் சேனலில் தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர் அவர்களின் பைகளை எக்ஸ்-ரே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அப்போது சாக்லேட் பாக்கெட்டுகளுக்குள் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் சாக்லேட் பாக்கெட்டுகளை திறந்து சோதனை செய்ததில், தங்கத் தூள் வடிவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 999.9 தூய்மையான தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

ஒரு பயணியிடமிருந்து 200 கிராம் மற்றும் மற்றொருவரிடமிருந்து 196 கிராம் என மொத்தம் 396 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தங்கம் இந்திய சுங்கச்சட்டம் 1962ன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட இரு பயணிகளுக்கும் எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com