

புது டெல்லி
தங்கத்துடன் சேர்த்து, பீடி, பிஸ்கட்கள், ஜவுளி மற்றும் காலணிகள் மீதான வரிகள் முடிவு செய்யப்பட்டுள்ளன.
கூட்டத்திற்கு பிறகு பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தங்கத்திற்கு 3 சதவீத வரி விதிக்கப்படும் என்றார். அதே போல ரூ. 500ற்கும் குறைவான காலணிகளுக்கு 5 சதவீதமும், அதற்கு மேலான விலையுள்ள காலணிகளுக்கு 18 சதவீதமும் விதிக்கப்படும். பீடிகளுக்கு 28 சதவீத வரியும் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்கம், வெள்ளி ஆகியவை 3 சதவீத வரியை கொண்டிருந்தாலும் வைரம் 0.25 சதவீத வரியை மட்டுமே கொண்டிருக்கும். குழு ஒருமனதோடு விகிதங்களை முடிவு செய்தாலும், மீதமுள்ள விஷயங்களை வரும் ஜூன் 11 ஆம் தேதி கூட்டத்தில் முடிவு செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. சூரிய ஒளி பலகைகள் மீது 5 சதவீத வரி விதிக்கப்படும். முன்னர் அறிவிக்கப்பட்ட 18 சதவீத வரி தவறானது என்று விளக்கம் தரப்பட்டது
பருத்தி ஜவுளிகளின் மீது 5 சதவீத வரி என்பது வரவேற்கத்தக்கது என பருத்தி ஆடைகள் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத் தலைவர் உஜ்வல் லகோடி தெரிவித்துள்ளார்.