வித்தியாசமான முறையில் ரூ.2 கோடி தங்கம் கடத்தல்! - விமான நிலையத்தில் சிக்கிய 4 பயணிகள்

ரூ.2 கோடியே 26 லட்சம் மதிப்பிலான 1,910 கிராம் தங்கக் கட்டிகள் மற்றும் நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வித்தியாசமான முறையில் ரூ.2 கோடி தங்கம் கடத்தல்! - விமான நிலையத்தில் சிக்கிய 4 பயணிகள்
Published on: 

மும்பை,

மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலையத்தில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

4 பயணிகளிடம் தீவிர சோதனை

அப்போது சவுதி அரேபியாவின் தம்மாம் மற்றும் மஸ்கட்டில் இருந்து வந்த 4 பயணிகளின் நடவடிக்கைகளில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை தடுத்து நிறுத்தி, அவர்களது உடைமைகளில் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது ஸ்பீக்கர், பொம்மை ஸ்கூட்டர் சக்கரங்கள், அயர்ன் பாக்ஸ் மற்றும் பெல்ட் பக்கிள்கள் ஆகியவற்றுக்குள் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

ரூ.2.26 கோடி தங்கம் பறிமுதல்

இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அவர்களிடம் இருந்து ரூ.2 கோடியே 26 லட்சம் மதிப்பிலான 1,910 கிராம் தங்கக் கட்டிகள் மற்றும் நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும், தங்கம் கடத்தலில் ஈடுபட்ட 4 பயணிகளையும் கைது செய்தனர்.

கடத்தலில் வேறு யாருக்காவது தொடர்பா?

இந்த தங்கக் கடத்தலில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? கடத்தப்பட்ட தங்கம் யாருக்காக கொண்டு வரப்பட்டது? என்பது குறித்து கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X