தாய்லாந்தில் இருந்து மும்பைக்கு கடத்தி வந்த ரூ.6½ கோடி தங்கம் பறிமுதல்

‘ஷூ'வில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.6½ கோடி தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தாய்லாந்தில் இருந்து மும்பைக்கு கடத்தி வந்த ரூ.6½ கோடி தங்கம் பறிமுதல்
Published on

மும்பை,

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சம்பவத்தன்று மும்பைக்கு விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்தில் பயணி ஒருவர் அதிகளவில் தங்கம் கடத்தி வருவதாக சுங்க துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் அதிகாரிகள் தாய்லாந்தில் இருந்து வந்த பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது பயணி ஒருவரின் 'ஷூ' வழக்கத்துக்கு மாறாக இருந்தது. சந்தேகமடைந்த அதிகாரிகள் அதனை கழற்றி சோதனை நடத்தினர். அப்போது அந்த பயணி 'ஷூ'வில் ரகசிய அறை அமைத்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. அதிகாரிகள் பயணியின் 'ஷூ'வில் இருந்து 6 கிலோ 735 கிராம் எடைகொண்ட 14 தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.6 கோடியே 30 லட்சம் என அதிகாரி ஒருவர் கூறினார். இதையடுத்து அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.

மேலும் அவர் கொடுத்த தகவலின்பேரில் பயணியிடம் இருந்து தங்கத்தை வாங்க வந்த நபரையும் கைது செய்தனர். 2 பேர் மீதும் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com