

புதுடெல்லி,
முப்படைகளின் தலைமை தளபதியாக பதவி வகித்து வந்த பிபின் ராவத் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8-ந்தேதி நீலகிரி, குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார்.
இந்த நிலையில், இந்தியாவின் புதிய முப்படை தலைமை தளபதியாக அனில் சவுகான் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்திய இராணுவ விவகாரத்துறை செயலாளராகவும் செயல்படுவார் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஓய்வுபெற்ற லெப்டினெண்ட் ஜெனரலான அனில் சவுகான், கடந்த 40 ஆண்டுகளாக பல முக்கிய ராணுவ ஆப்ரேஷன்களுக்கு தலைமை வகித்த அனுபவம் கொண்டவர் ஆவார்.