

பெங்களூரு,
கர்நாடகத்தில் பெங்களூரு மெட்ரோபாலிட்டன் போக்குவரத்து கழகம், கர்நாடக அரசு போக்குவரத்து கழகம், கல்யாண கர்நாடக அரசு போக்குவரத்து கழகம், வடமேற்கு அரசு போக்குவரத்து கழகம் என 4 போக்குவரத்து கழகங்கள் உள்ளன.
அந்த போக்குவரத்து கழகங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் சம்பள உயர்வு, நிலுவை தொகையை விடுவிக்க கோரி அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு மறுத்து வருகிறது.
போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்துடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் வருகிற 20-ம் தேதி முதல் அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கங்கள் சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என போக்குவரத்து கழக ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.