பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த அரசு ஊழியர் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த அரசு ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த அரசு ஊழியர் கைது
Published on

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவி நிர்வாக அதிகாரியாக இருந்தவர் ஷாகுர் கான். இவரது சந்தேக நடவடிக்கைகள் காரணமாக சமீபகாலமாக இந்திய உளவு அமைப்புகளால் இவர் கண்காணிக்கப்பட்டு வந்தார். அப்போது ஷாகுர் கானுக்கு, பாகிஸ்தான் உளவு அதிகாரிகளுடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக மத்திய உளவு அமைப்பினர், ஷாகுர்கானை, ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வந்தனர்.

அப்போது அவரிடம் பாகிஸ்தானுக்கு செல்லும் விசா இருந்ததும், பல முறை அவர் பாகிஸ்தான் சென்று வந்ததும் உறுதி செய்யப்பட்டது. அதற்கு பாகிஸ்தான் உளவு அதிகாரி டேனிஷ் உதவி செய்துள்ளார். பாகிஸ்தான் சென்று திரும்பியதும், உளவு அதிகாரிகளுக்கு பல்வேறு முக்கிய தகவல்களை அவர் வழங்கி உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து ஷாகுர் கான் கைது செய்யப்பட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com