

புதுடெல்லி,
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முப்படைகளுக்கும் சேர்த்து தலைமை தளபதி பொறுப்பை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.
முப்படைகளின் தலைமை தளபதி, முப்படைகளின் சேவை விஷயங்களில் பாதுகாப்பு அமைச்சரின் முதன்மை ராணுவ ஆலோசகராக செயல்படுவார். மூன்று தலைவர்களும் அந்தந்த சேவைகள் தொடர்பான பிரத்யேக விஷயங்களில் பாதுகாப்பு அமைச்சருக்கு தொடர்ந்து ஆலோசனை வழங்குவார்கள்.
முப்படை தளபதிகளுக்கும் உத்தரவிட முடியாது. எந்தவொரு ராணுவத்திற்கும் உத்தரவிட முடியாது.
முப்படைகளின் தலைமை தளபதி பதவியை நான்கு நட்சத்திர அந்தஸ்து ஜெனரல் வகிப்பார். இந்த பதவியை விட்டு விலகினால் அவர் எந்த அரசு பணிக்கும் தகுதியற்றவராகி விடுவார். 5 வருட காலத்திற்கு முன்அனுமதியின்றி எந்தவொரு தனியார் வேலைவாய்ப்பையும் அவர் ஏற்றுக்கொள்ள முடியாது.