ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயார்; நாடாளுமன்றத்தில் ஜேபி நட்டா தகவல்


ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயார்; நாடாளுமன்றத்தில் ஜேபி நட்டா தகவல்
x

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது.

டெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. மக்களவையும், மாநிலங்களவையும் காலை 11 மணிக்கு தொடங்கிய நிலையில் பல்வேறு விவகாரங்களை முன்நிறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. இதன் காரணமாக இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

முன்னதாக, பஹல்காம் தாக்க்குதல், ஆபரேஷன் சிந்தூர், இந்தியா பாகிஸ்தான் மோதலில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் கருத்து உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டுமென மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.

அவரை தொடர்ந்து பேசிய மத்திய மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான ஜேபி நட்டா, ஆபரேஷசன் சிந்தூர் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக கூறினார். அதேவேளை, இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் முழுமையான விவாதத்திற்கு எவ்வளவு நேரம் தேவைப்படுமோ அவ்வளவு நேரம் வழங்கப்படும் என்று சபாநாயகர் ஜக்தீப் தங்கர் உறுதியளித்துள்ளார்.

1 More update

Next Story