செப்.3, 4 ஆம் தேதிகளில் டெல்லியில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்

சரக்கு மற்றும் சேவை வரி கணிசமாக குறைக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
FILEPIC
FILEPIC
Published on

புதுடெல்லி,

தற்போது, ஜி.எஸ்.டி. 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 அடுக்குகள் கொண்டதாக இருக்கிறது. உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் பூஜ்யம் அல்லது 5 சதவீத வரி அடுக்கிலும், ஆடம்பர பொருட்கள் மற்றும் புகையிலை போன்ற பாவ பொருட்கள் 28 சதவீத வரி அடுக்கிலும் வருகின்றன.

சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றிய பிரதமர் மோடி, தீபாவளிக்குள் ஜி.எஸ்.டி. கணிசமாக குறைக்கப்படும் என்று கூறினார்.

இந்தநிலையில், செப்.3, 4 ஆம் தேதிகளில் டெல்லியில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி கணிசமாக குறைக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஜவுளி பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், காலணி மீதான ஜிஎஸ்டியும் குறைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com