ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம்: இன்று முதல் அமல்- எந்தெந்த பொருட்களின் விலை கூடும்?


ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம்: இன்று முதல் அமல்- எந்தெந்த பொருட்களின் விலை கூடும்?
x
தினத்தந்தி 22 Sept 2025 7:17 AM IST (Updated: 22 Sept 2025 7:32 AM IST)
t-max-icont-min-icon

ஜிஎஸ்டி விகிதம் 4 அடுக்குகளாக இருந்த நிலையில், தற்போது இரண்டு அடுக்குகளாக குறைக்கப்பட்டிருக்கிறது

புதுடெல்லி,

வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் சுமையை குறைக்கும் வகையில், நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, இரண்டு அடுக்குகளாக எளிமைப்படுத்தப்பட்டது. இதன்படி 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி., 5 மற்றும் 18 என இரு அடுக்குகளாக மாற்றப்பட்டது. இந்த புதிய விகிதம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை குறைய உள்ளது. அதேபோல சில பொருட்களின் விலை கூட இருக்கிறது. குறிப்பாக ஆடம்பர பொருட்களின் விலை கூட உள்ளது. சிகரெட், பான் மசாலா, குட்கா, மெல்லும் புகையிலைப் பொருட்கள் உள்ளிட்டவை கடுமையாக உயர உள்ளது. ஏனெனில் இவற்றுக்கான வரி 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, குளிர்பானங்கள், 350 சிசி திறனுக்கு மேலே உள்ள பைக்குகள் (ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் அல்லது 650 சிசி சீரிஸ் பைக்குகள்) விலை அதிகரிக்க உள்ளது.சொகுசு கார்கள், இறக்குமதி செய்யப்படும் எஸ்.யூ.வி கார்கள் ஆகியவையும் விலை கூட உள்ளது.

விலை குறையும் பொருட்கள்

சாக்லேட்டுகள், பாஸ்தா, ரெடிமேட் நூடுல்ஸ், பன்னீர், நெய், வெண்ணெய், உலர் பழங்கள், நொறுக்குத் தீனி உள்ளிட்டவைகளின் விலை குறைய உள்ளது. மக்களின் வீட்டு உபயோகப் பொருட்களான ஏ.சி., ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், 32 இன்ச்-க்கு மேல் உள்ள டி.விகள், டிஷ் வாஷர் ஆகியவை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீத வரிக்குள் வந்து விட்டது. இதனால் இந்தப் பொருட்களின் சராசரி விலையில் இருந்து 10 சதவீதம் குறைகிறது.

உதாரணமாக ரூ.40 ஆயிரம் விற்கப்பட்ட ஏ.சி., இப்போது ரூ.4 ஆயிரம் குறைந்து ரூ.36 ஆயிரமாகி இருக்கிறது. ஆடம்பர கார்களைத் தவிர 1,200 சிசி-க்கும் குறைவாக உள்ள கார்கள் அனைத்தும் விலை குறைக்கப்பட்டுள்ளன. அதன் வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால், அதன் விலைக்கு ஏற்ப விலை குறைவு இருக்கிறது. அதாவது ரூ.65 ஆயிரம் முதல் ரூ.3½ லட்சம் வரை கார் விலை குறைகிறது.

கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

1 More update

Next Story