குஜராத்: சிறுமியை 3 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த 8 பேர் கைது

குஜராத்தில் ஒரு சிறுமியை வாலிபர் ஒருவர் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். அச்செயலை வீடியோ எடுத்து, தனது நண்பர்களுக்கு காண்பித்துள்ளார்.
குஜராத்: சிறுமியை 3 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த 8 பேர் கைது
Published on

காந்திநகர்,

குஜராத் மாநிலம் கேதா மாவட்டத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியின் பெற்றோர், கேதா நகர போலீசில் திடுக்கிடும் புகார் அளித்தனர்.

கடந்த 2023-ம் ஆண்டு, அந்த சிறுமியை பர்வேஸ்கான் பதான் (வயது 23) என்பவர் மிரட்டி கற்பழித்தார். அச்செயலை வீடியோ எடுத்து, தனது நண்பர்களுக்கு காண்பித்துள்ளார். அதனால் அவரது நண்பர்களும் அந்த சிறுமியை மிரட்டி கடந்த 3 ஆண்டுகளாக அடுத்தடுத்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.

ஒருவழியாக தைரியம் அடைந்த சிறுமி, தனது பெற்றோரிடம் இந்த கொடுமையை தெரிவித்துள்ளார். அதன் பிறகு அவர்கள் போலீசில் புகார் செய்துள்ளனர். போலீசார் போக்சோ, பாரதீய நியாய சன்ஹிடா சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்து பர்வேஸ்கான் பதான் உள்பட 8 பேரை கைது செய்தனர். அவர்கள் 19 வயது முதல் 26 வயதுக்கு உட்பட்டவர்கள். மேலும் இதில் தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com