

காந்திநகர்,
குஜராத் மாநிலத்தின் மோர்பி மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட்- மோர்பி தேசிய நெடுஞ்சாலையில் தங்காரா எனும் பகுதியில் எதிரே வந்த லாரியின் மீது வேகமாக வந்த கார் மோதியதில் இந்த கோர விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்து நிகழ்ந்தபோது ஏற்பட்ட தீயினால் பலி எண்ணிக்கை அதிகரித்தது.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக அவர்களது உடல்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த கோர விபத்தில், காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.