

ஆமதாபாத்
குஜராத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 8 பேர் பலியாகி உள்ளனர்.
குஜராத்தில் ஆமதாபாத் நகரில் ரமோல்-கத்ராட் சாலையில் பட்டாசு தயாரிப்பு மற்றும் பதப்படுத்தும் ஆலை செயல்பட்டு வருகிறது. இதில் இன்று திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட தீ மளமளவென மற்ற இடங்களுக்கும் பரவியது.
இதன் தொடர்ச்சியாக பட்டாசுகள் அடுத்தடுத்து வெடித்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் சிக்கி தொழிலாளர்களில் 8 பேர் பலியாகி உள்ளனர். அவர்களின் உடல்களை அதிரடி விரைவு படையினர் மீட்டனர். தவிர 10 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.
அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சென்று தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.